ஆம் ஆத்மி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் காங்கிரஸ் கட்டளைப்படி கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது ஒருமுட்டாள்கள் கூட்டம் என்று முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக. துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது :-

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரண்டுமே ஒன்றுதான். ஆம் ஆத்மி காங்கிரசின்பினாமி. டெல்லியில் பாஜக. ஆட்சிக்குவருவதை தடுக்கவே காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருகிறது . ஆனால் டெல்லி சட்டமன்ற தோ்தலுக்குப் பின் அவர்கள் இப்போது அம்பலப்படுத்தப்பட்டு விட்டனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காது.

ஆம் ஆத்மி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் காங்கிரஸ் கட்டளைப்படி கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது ஒருமுட்டாள்கள் கூட்டம். அவர்களுக்கு நாங்கள் பதிலளிக்க தேவையில்லை. ஆம் ஆத்மி சர்வதேசதொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம்பெறுகிறது. அவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்.

முன்னாள் கூட்டணிகட்சிகள் தற்போது எங்களிடம் வருகிறார்கள். வரும் நாட்களில் மேலும் சிலர் எங்களுடன் இணைவார்கள். நாங்கள் உறுதியான, நிலையான ஆட்சியை நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் வழங்குவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply