முன்னாள் பிரதமரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான, கர்நாடகாவைச் சேர்ந்த, தேவகவுடாவுக்கு எதிராக, பசவானந்த சுவாமியை நிறுத்த, பாஜக., முடிவு செய்துள்ளது.

தேவகவுடா, கர்நாடகாவின், ஹசன் லோக் சபா தொகுதியின், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின், எம்பி.,யாக உள்ளார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், அவர், அதேதொகுதியில்
போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, பாஜக., சார்பில், அப்பகுதியில் பிரபலமான சாமியார், பசவானந்த சுவாமியை நிறுத்த, பாஜக., முடிவுசெய்துள்ளது. ஸ்ரீகுரு பசவமகாமனே மடத்தின் தலைவரான பசவானந்த சுவாமி, பார்வையற்றவர். “லிங்காயத்’ சமுதாயத்தை சேர்ந்தவர்,

தீர்க்கமுடியாத நோய்களையும், யோகாசன பயிற்சியின் மூலம் தீர்த்துவருபவர் என்பதால், அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். தேவகவுடாவை எதிர்த்து போட்டியிட தயார் என, அந்த சாமியாரும் அறிவித்துள்ளார்

Leave a Reply