பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெற வில்லை என்றும் தமிழகத்தில் கூட்டணிகுறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் வியூகங்கள் குறித்து தமிழ் நாளேடு ஒன்றுக்கு ராஜ்நாத்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

குஜராத்கலவரம் தொடர்பாக பாஜக எந்த தவறையும் இதுவரை இழைத்ததாக நான் நினைக்கவில்லை . ஆனால் காங்கிரஸ் கட்சியும், அரசும் நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கிறது. அவர்கள் தான் மன்னிப்புகேட்க வேண்டும்.

நாங்கள்யாராவது தவறு இழைத்திருக்கிறோம் எனில் மன்னிப்பு கோருகிறோம். ஏனென்றால் நாங்கள் எப்போதும் மனித நேயம் மற்றும் நீதியில் நம்பிக்கை வைத்துள்ளோம் . இவைதான் எங்கள் அரசியல் கொள்கையின் அடிப்படை அம்சமாகும். தமிழ்நாட்டில் கண்டிப்பாக பாஜக தலைமையில் ஒருகூட்டணி விரைவில் அமையும்.

யாருடன் கூட்டணி என்பதை இப்போது கூறமுடியாது. ஆனால் கூட்டணி உண்டு. திமுக.வுடன் கூட்டணி தொடர்பாக இது வரை பேச்சுவார்த்தை எதுவும் நடைபெற வில்லை. பாஜக.,வின் பிரதமர்வேட்பாளர் மோடியை கருணாநிதி புகழ்ந்து பேசியிருக்கிறார்.. ‘நன்றி திரு.கருணாநிதி அவர்களே’. என் நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் எந்த கூட்டணி அமைந்தாலும் அதனை மிகவிரைவாக முடிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களிடம் கூறினேன். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏதாவது ஒருகூட்டணி கண்டிப்பாக அமையும். நான் சொல்வதை இன்னும் ஒருவாரம் என்று குறித்து கொள்ளுங்கள் என்றார்.

Leave a Reply