காங்கிரஸூடன் தங்கள்கட்சி இணைக்கப்பட வில்லை , மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என தெலங்கானா ராஷ்ட்ரசமிதி அறிவித்துள்ளது

ஹைதராபாதில் நடைபெற்ற டிஆர்எஸ். பொதுக்குழு கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில்கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுப்பதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கொண்டகுழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் முடிந்தபிறகு டிஆர்எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டி.ஆர்.எஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியை காங்கிரஸூடன் இணைப்பதில்லை என்று ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும் தனியாக ஒருகுழுவை அமைத்துள்ளோம் என்றார்.

Leave a Reply