மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர்பிரசாத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்குறித்து அவர் கூறுகையில், கடந்த 2009 தேர்தலைவிட 10 கோடி புதியவாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்கள். இத்தகைய சூழலில், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் ஒழிப்பு ஆகியன பா.ஜ.க தேர்தல்பிரச்சாரத்தில் முக்கிய விவகாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

மேலும், எதிர்கட்சியினர் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் செல்வாக்கை கண்டு அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். வளர்ச்சியை நோக்கி இந்தியா என்பது பாஜக பிரச்சார மையப்புள்ளியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply