குஜராத் மாநிலத்தில் காவல்துறையின் முன் அனுமதியின்றி புதன்கிழமை சாலையோரப் பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அம்மாநில போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

குஜராத் மாநிலத்தில் நான்கு நாள்பயணம் மேற்கொண்டுள்ள கேஜரிவால் புதன் கிழமை கட்ச்பகுதிக்கு செல்லும் வழியில் சாலையோரப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்துக்கு காவல்துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால், குஜராத் ஆம் ஆத்மி கட்சி, இதற்கான அனுமதியைப் பெறவில்லை என்று கூறி கேஜரிவாலை ரத்தன் பூர் என்ற இடத்தில் போலீஸார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.

Leave a Reply