பாஜக பிரதமர்வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியை பிரதமராக்கவே பாஜகவில் மீண்டும் இணைய முடிவுசெய்துள்ளதாக பிஎஸ்ஆர். காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெல்லாரியில் புதன் கிழமை நடைபெற்ற பிஎஸ்ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடன் 4 சட்டப் பேரவை உறுப்பினர்கள், தொண்டர்களும் பா.ஜ.க.,வில் இணைகின்றனர்’ என்றார்.

ஸ்ரீரா முலுவிற்கு மக்களவைத் தேர்தலில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply