மபி முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசைக்கண்டித்து போபாலில் தர்னாவில் ஈடுபடுகிறார்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிப்பதாகக்கூறி இந்த தர்னா நடத்தப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், “”முதல்வர் சௌஹான் தில்லி சென்றிருந்த போது பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கித்தரவில்லை. விவசாயிகளுக்காக போராடுவதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. மாநிலம் முழுவதும் விவசாயிகளும், எம்பி.க்களும் சாலைமறியலில் ஈடுபடுவர்’ என்றார்.

கேஜரிவால், கிரண்குமார் ரெட்டி, நிதிஷ் குமார் ஆகியோரை தொடர்ந்து 4ஆவது முதல்வராக சௌஹான் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்.

Tags:

Leave a Reply