வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக. கூட்டணியில் தே.மு.தி.க. பாமக இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. இத்தேர்தலில் அக்கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று முதல் அதிகார பூர்வமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, தேமுதிக. தலைமைக் கழகம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- தேமுதிக. வருகின்ற 24-4-2014 அன்று நடைபெற உள்ள 16-வது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துபோட்டியிட முடிவுசெய்துள்ளது ,பாஜக.,வுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது' என அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. சுதீஷ் தலைமையிலான தேமுதிக. நாடாளுமன்ற தேர்தல் குழுவும், பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் தொகுதிபங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Tags:

Leave a Reply