லோக்சபா தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவுசெய்துள்ளது. தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள்கட்சி அறிவித்துள்ளது.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நடைபெற்ற பா.ம.க நிர்வாகக்குழு கூட்டத்தில் கூட்டணிகுறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம்மளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்ததீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிலமணி நேரங்களிலேயே பா.ஜ.க.,வுடன் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜிகே. மணி அறிவித்துள்ளார்.

இன்று காலை 12 மணிக்கு பா.ம.க குழுவினர் கமலாலயம் வருகின்றனர். அங்கு தொகுதிபங்கீடு குறித்த ஆலோசனை நடைபெறுகிறது.

Tags:

Leave a Reply