பாஜக கூட்டணியில் புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதன் பிறகு அரசியல் கட்சிகளிடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்பியது. இதற்காக கடந்தமாதம் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் மோகன் ராஜலூ மற்றும் லட்சுமணன் ஆகியோர் புதுவை வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்–அமைச்சருமான ரங்கசாமி தெரிவித்திருந்தார் . அதோடு புதுவை பாராளுமன்ற தொகுதியில் என்ஆர்.காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழகத்தில் பாஜக.,வுடனான கூட்டணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடனும், பாஜக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் . பாரதிய ஜனதா கூட்டணியில் சேர ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply