போர்க்கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு பொறுப் பேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோணி பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் கப்பற் படையின் மோசமான நிலைகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர், நாட்டின் பாதுகாப்புகுறித்து மத்திய அரசு அக்கறை காட்டவில்லை முப்படைகளுக்கு உபகரணங்களும், தளவாடங்களும் வாங்குவதற்கு போதியநிதி ஒதுக்க வில்லை என்று குற்றம்சாட்டினார். உபகரணங்கள் வாங்கும்முறையில் வெளிப்படையான தன்மை இல்லாமல் ஊழல் மலிந்திருப்பதாலேயே விபத்துகள் நிகழ்வதாகவும் அவர்கூறினார்.

Leave a Reply