சீமாந்திரப் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்வகையில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பா.ஜ.க.,வில் இணைகிறார்.

விசாகப்பட்டினம் எம்.பி.யான புரந்தேஸ்வரி வியாழக் கிழமை விசாகப்பட்டினத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்துப்பேசினார். இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் அவர் கூறியதாவது:

இங்கு எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்தேன். நான்சேரப்போகும் கட்சியில் இணையுமாறு யாரையும் வற்புறுத்தவில்லை. நான் காங்கிரஸில் இருந்து விலக எடுத்துள்ள முடிவு மிகவும்கடினமானது.

பா.ஜ.க.,வில் இணைவது தொடர்பாக தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளேன். தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சியமைக்க போதிய இடங்கள் கிடைக்கா விட்டால் தெலங்கானா ராஷ்டிரசமிதி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவை பெறலாம் என காங்கிரஸ் திட்டமிடுகிறது என்றார்.

Leave a Reply