பாஜக – தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடைபெற்று வருவதாக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தே.மு.தி.க குழுவுடன் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

இன்று தே.மு.தி.க.,வுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து 2வது நாளாக பேசினோம். இதற்காக சுதீஷ்வந்திருக்கிறார்.

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிகள் பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும். நாங்கள் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் போட்டியிடுகிறோம். இந்தக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து போட்டியிடுகிறோம். பாமக.,வுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை உடனே நடைபெறும்…

எங்கள் கூட்டணியில் எந்தக்குழப்பமும் இல்லை. கூட்டணியில் எல்லா கட்சிகளும் இணைந்து தேர்தல் களத்தைக் காண்கிறோம். இது, முதல்நிலை வெற்றிக்கூட்டணியாக அமையும் என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்கே.சுதீஷ், பா.ஜ.க.,வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் , பாஜக – தேமுதிக கூட்டணி தமிழகத்தில் வெற்றி கூட்டணியாக அமையும் என்று தெரிவித்தார்.

Leave a Reply