உலகமகளிர் தினத்தை முன்னிட்டு ‘நமோ’ ‘டீ’ கடைகளில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நரேந்திர மோடி பெண்களுடன் கலந்துரை யாடல் மேற்கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது ; இன்று சர்வதேச மகளிர் தினம். நம் நாட்டில்வசிக்கும், ஒவ்வொரு பெண்களுக்கும், என் வாழ்த்துக்கள். இந்நாட்டை கட்டமைத்ததிலும், வளர்ச்சியிலும், பெண்களுக்கு உள்ள முக்கியபங்கை, யாராலும் மறுக்கமுடியாது. குடும்பத்துக்குள்ளேயே, ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையே, பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்களிடம் பாகுபாடுகாட்டுவதே, சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையை மாற்றவேண்டும்.

கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றை தேர்வுசெய்வதில், பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும். “ஒரு பெண் கல்விகற்றால், இரண்டு குடும்பங்கள் கல்வி அறிவு பெற்றுவிடும்’ என, தேசப்பிதா மகாத்மா காந்தி கூறினார்.

இந்த விஷயத்தில், ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். ஒருபெண் கல்வி கற்றால், இரண்டு குடும்பங்கள் மட்டுமல்ல; இரண்டு தலைமுறையே கல்வி கற்றுவிடும்.

பெரும்பாலான பள்ளிகளில், பெண் குழந்தைகளுக்கு கழிப்பறைகள் இல்லை. இதனால்தான், பெண்கள், பாதியிலேயே, படிப்பை கைவிடுகின்றனர். இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, விரைவில் தண்டனை வழங்கவேண்டும். அப்போதுதான், இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யக் கூடாது என்ற பயம், அவர்களுக்கு ஏற்படும்.

புதிய தொழில்நுட்பங்களை கையாளுவதில், ஆண்களைவிட, பெண்கள், வேகமாகவும், ஆர்வமாகவும் உள்ளனர். பொருளாதார ரீதியாக பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும். இதன்மூலம், அவர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும். என்று மோடி பேசினார்.

Leave a Reply