மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அக்கூட்டத்தில், “மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் காரணம்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் திரிவேந்திர சிங் ராவத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- காந்தி கொலைவழக்கில் ஆர்எஸ்எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி பேசிய ராகுலின்கருத்து குழந்தை தனமானது, அவருக்கு வரலாறு பற்றிய அறிவு இல்லை என்பதை இதுகாட்டுகிறது.

அவர் வரலாற்றை படிக்கவேண்டும். காந்தி கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. அதையே பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். எனவே சேற்றைவாரி வீசுவது போல ராகுல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருதேசிய அமைப்பை இப்படி குறிப்பிடக்கூடாது. நாடுமுழுவதும் எங்களுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

பிரதான கட்சிகளிலுள்ள முன்னணி தலைவர்கள் பாஜக.வில் இணைய தங்கள் கட்சிகளை விட்டுவிலகி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, வரலாறுகாணாத ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு என தவறான ஆட்சியை காங்கிரஸ் நடத்திவருகிறது என்று அவர் பேசினார்.

Tags:

Leave a Reply