பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா (1916-1968); பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக 1953 முதல் 1968 வரை பதவி வகித்தவர். ஆழ்ந்த மெய்யியலாளர் (philosopher), தேர்ந்த அமைப்பாளர்,

தன்னொழுக்கத்தில் மேன்மையை கடைப்பிடித்த வழிகாட்டி மற்றும் கருத்து வழிகாட்டுதலில் மூல சக்தியாகவும், பாஜகவின் தொடக்கத்திலிருந்து அதன் தார்மீக தூண்டுதலாக விளங்கியவர். பொதுவுடமையையும் முதலாளித்துவத்தையும் ஒருசேர விமர்சிக்கும், அவருடைய கட்டுரையான 'அடிப்படை மனிதநேயம்', அரசியல் நடவடிக்கைக்கு முழுமையான மாற்று கண்ணோட்டத்தை வழங்குகிறது. மேலும், உருவாக்கத்தின் விதிகளுடன் மனித இனத்திற்கான பிரபஞ்சத்தேவையுடன் கூடிய உறுதியான அரசியல் கலையையும் அக்கட்டுரை வழங்குகிறது.

சிறு வாழ்க்கை சரிதம்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள், மதுரா மாவட்டத்தில், நாக்லா சந்த்ராபன் கிராமத்தில் பிரிஜ் எனும் புனிதஸ்தலத்தில் 1916-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி திங்கட்கிழமை பிறந்தார். தந்தையார் புகழ்பெற்ற ஜோதிடர். தன் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்த அவர், தீன்தயாள் உபாத்யாயா வருங்காலத்தில் பெரிய பண்டிதராகவும், சிந்தனையாளராகவும், தன்னலமற்ற சேவகராகவும், முன்னணி அரசியல்வாதியாகவும் வருவார் – ஆனால் மணம் புரியமாட்டார் என்றும் கணித்தார். பத்பூர் சோகம் குடும்பத்தை பாதித்த வேளையில், 1934-ல் தன் சகோதரனை நோய்க்கு பலிகொடுத்தார். பின்னர் உயர்நிலைப்பள்ளிக்கு சிகார் சென்றார். சிகார் மஹாராஜா, பண்டிட் உபாத்யாயாவிற்கு தங்கப்பதக்கமும், புத்தகங்களுக்காக, 250 ரூபாயும், மாதாந்திர உதவித்தொகையாக 10 ரூபாயும் வழங்கினார்.

பிலானியில் இடைநிலைக்கல்வியை அதிக மதிப்பெண்களுடன் தேர்ந்த அவர், பின்னர் இளங்கலை படிக்க கான்பூர் சென்று, சநாதன் தர்ம கல்லூரியில் சேர்ந்தார். தன் நண்பர் ஸ்ரீ.பல்வந்த் மகாஷப்டேவைப்பார்த்து, ஆர்எஸ்எஸ்ஸில் 1937-ம் ஆண்டு சேர்ந்தார். அதே ஆண்டில் இளங்கலை பட்டத்தை முதல் பிரிவில் பெற்றார். அங்கிருந்து பின்னர் அவர் ஆக்ராவில் முதுகலை பயிலச்சென்றார். அங்கு அவர் ஆர்எஸ்எஸ் இயக்கப்பணிகளுக்காக ஸ்ரீ.நானாஜி தேஷ்முக்குடனும் ஸ்ரீ.பாவு ஜூகாடேவுடனும் கை கோர்த்தார். இக்காலகட்டத்தில் உபாத்யாயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ராமா தேவி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆக்ரா கொண்டு வரப்பட்டவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த உபாத்யாயா முதுகலை தேர்வுகளை எழுத முடியாமல் போனது. இதனால் சிகார் மகாராஜாவிடமிருந்தும், ஸ்ரீ.பிர்லாவிடமிருந்தும் வந்துகொண்டிருந்த கல்வி உதவித்தொகை நின்று போனது.

உபாத்யாயா அவர்கள் தன் அத்தையின் ஆலோசனையின்பேரில் அரசு நடத்தும் போட்டித்தேர்வை எழுதினார். தேர்விற்கு வேட்டி, குர்தா, தலையில் குல்லாவுடன் சென்றிருந்தார். மேற்கத்திய உடையில் வந்த மற்றவர்களோ அவரை விளையாட்டாக "பண்டிட்ஜி" என்று அழைத்தனர் – இந்த பட்டப்பெயரில்தான் வருங்காலத்தில், லட்சக்கணக்கானவர்களால் மதிப்புடனும் அன்புடனும் அவர் அழைக்கப்பெற்றார். இந்த தேர்விலும் தேர்வானவர்களில் முதலிடம் பெற்றார். மாமாவின் அனுமதியுடன் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படிக்க பிரயாக் சென்ற அவர் அங்கு ஆர்எஸ்எஸ் பணிகளைத்தொடர்ந்தார். தொழில்நுட்பப்படிப்பை முடித்த பின்னர் முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியரான அவர், அமைப்பாளராக பணிபுரிய உ.பி. மாநிலத்தின், லக்கிம்பூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார். பின்1955-ல் உ.பி. மாகாண அமைப்பாளராக உயர்ந்தார்.

லக்னோவில் 'ராஷ்ட்ர தர்ம பிரகாஷன்' எனும் பதிப்பகத்தை ஸ்தாபித்த அவர், 'ராஷ்ட்ர தர்மம்' எனும் மாதப்பத்திரிக்கையை வெளியிட்டு தான் புனிதமாக கருதும் கொள்கையை பரப்பினார். 'பஞ்சஜன்ய' எனும் வாரப்பத்திரிக்கையையும், 'ஸ்வதேஷ்' எனும் தினப்பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தினார்.

இக்காலகட்டத்தில், 1950-ல் முன்னாள் மத்திய மந்திரி, டாக்டர்.ஸியாமா பிரசாத் முகர்ஜீ அவர்கள், நேரு-லியாகத் உடன்படிக்கையை எதிர்த்து, மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பொதுவான ஜனநாயக சக்திகளின் முன்னணியை உண்டாக்கினார். அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த இளைஞர்களை கட்டமைத்து இந்த முன்னணியை அரசியல் மட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல, ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்ரீ.குருஜியிடம் டாக்டர்.முகர்ஜீ உதவி கோரினார்.

செப்டம்பர் 21, 1951-ல் பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் உ.பியில் அரசியல் மாநாட்டை கூட்டி புதிய கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் மாநில அமைப்பை தொடங்கினார். பண்டிட் தீன்தயாள்ஜியின் முயற்சியில் டாக்டர்.முகர்ஜீ அவர்களின் தலைமையில், முதல் அகில இந்திய மாநாடு, அக்டோபர் 21, 1951-ல் கூட்டப்பட்டு சிறப்பாக நடந்தது..

பண்டிட் தீன்தயாள்ஜியின் கட்டமைக்கும் திறன் ஒப்பிட முடியாதது. 1968 ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டிய நாள் வந்தது – அதுதான் நிகரில்லா தலைவரான, பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் தலைமைப்பொறுப்பேற்ற நாள். பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தெற்கிற்கும் பயணம் செய்து ஜன சங்கத்தின் செய்திகளை பரப்பினார். 1968, பிப்ரவரி 11-ம் தேதியின் இருண்ட இரவில் பண்டிட் தீன்தயாள்ஜி, மரணத்தின் பிடியில் சிக்கினார்.

Leave a Reply