லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் பாஜகவின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை தற்போது அலங்கரித்து வருகிறார்.

1980ல் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியதிலிருந்து, அத்வானி அவர்கள் கட்சித்தலைவராக பல வருடங்கள் பணியாற்றியுள்ளார். 30 ஆண்டு கால

பாராளுமன்ற வாழ்க்கைக்கு மகுடம் வைத்தது போல், அத்வானி அவர்கள் முதலில் மத்திய உள்துறை அமைச்சராகவும், பின்னர் ஆடல் பிஹாரி வாஜ்பாயீ அவர்களின் அமைச்சரவையில் துணை பிரதம மந்திரியாகவும் (1999-2004)இருந்துள்ளார்.

அத்வானி அவர்கள், அறிவுஜீவித்தனத்துக்கும், பலமான கொள்கைகளுக்காகவும், வலிமையான வளமான இந்தியா என்ற நோக்கமுடையவர் போன்ற காரணங்களுகளுக்காக மெச்சப்ப்படுபவர். வாஜ்பாயீ அவர்கள் சொன்னது போல, 'அத்வானி அவர்கள், தன் அடிப்படை கொள்கையான, தேசியத்தை, தன் அரசியல் பொறுப்புகளுக்காக எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்'.

நவ.8,1927-ல் பிரிவினைக்கு முன்பான சிந்து மாகாணத்தில், பிறந்து வளர்ந்தவர். கராச்சியிலுள்ள செயிண்ட் பாட்ரிக் பள்ளி மாணவரான அவர், தேசபக்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன் 14ஆம் வயதிலேயே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (RSS) தன்னை இணைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தன் வாழ்க்கையை தேச சேவைக்காகவே அர்ப்பணித்துவிட்டார்.

பிரிட்டிஷாரிடமிருந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதை அத்வானி அவர்களால் அதிகம் கொண்டாடமுடியாமல் வருத்தத்தில் முடிந்தது. காரணம், இந்திய பிரிவினைக்குப்பின் நிகழ்ந்த பயங்கரவாதத்தாலும் ரத்தக்களரியாலும், பிறந்தமண்ணை விட்டு இடம் பெயரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் அவருடையதும் ஒன்றானது. ஆனால் இத்தகைய சோக நிகழ்வுகளால், வெறுப்பும் கசப்பும் கொள்ளாமல், மாறாக அவருக்குள் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்கும் வேட்கையை தூண்டியது. இதே குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக பணியாற்ற ராஜஸ்தானிற்கு பயணமானார்.

1980-களின் பிற்பகுதியிலிருந்து, 90கள் வரையான காலத்தில், அத்வானி அவர்களின்

பார்வை, பாஜகவை தேசிய அரசியல் சக்தியாக மாற்றும் நோக்கத்திலேயே குவிந்திருந்தது. அவருடைய இந்த முயற்சிகளுக்கான விளவு 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கிடைத்தது. 1984 தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த கட்சி, 86 இடங்களை பெற்று கவனிக்க வைத்தது. கட்சியின் நிலை 1992-ல் 121 ஆகவும், 1996-ல் 161 ஆகவும் உயர்ந்தது; அந்த தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. சுதந்திரத்திற்குப்பின் முதல் முறையாக, ஒப்பற்ற நிலையிருந்த காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டு, பாஜக, மக்களவையிலேயே அதிக இடங்களை பெற்ற கட்சியானது.

உணர்வுபூர்வமான குணமும், பலமான குடும்ப உறவுகளையும் கொண்டிருந்த அத்வானி அவர்கள் கூறியது இது: "இயற்கை நம் முன் சந்தோஷத்தையும் அதன் அர்த்தங்களையும் ஊசலாட்டி காட்டும், இரண்டிலொன்றை தேர்ந்தெடுக்குமாறு குறிப்பிடும், ஆனால் இரண்டையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டத்தை நான் அடைந்தேன், அதுவும் மிகுதியாகவே"

அத்வானி அவர்கள், இந்திய மக்களை சரியான தலைமையை தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்துகிறார், 'இந்தியாவின் கடந்த காலத்தை தவறுகளுடனேயே கழித்தவர்களையா? அல்லது ஒன்றுபட்ட, வலிமையான உயர்ந்து நிற்கும், இன்றைய நிலையை விட பிரகாசமான இந்தியாவிற்கு உத்தரவாதம் தரும், முன்னோக்கி பார்க்கும் தலைமையா?'

அத்வானி வாழ்க்கை நிகழ்வுகள்

 • நவ 8, 1927 – அத்வானி அவர்கள் கிஷன்சந்த் – கியானிதேவி அத்வானி தம்பதியருக்கு மகனாக, (இன்றைய பாகிஸ்தானில் உள்ள) கராச்சியில் பிறந்தார்.
 • 1936-1942 – கராச்சியிலுள்ள செயிண்ட் பாட்ரிக் பள்ளியில் படித்தார். மெட்ரிக்குலேஷன் முடிக்கும் வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவராக திகழ்ந்தார்.
 • 1942 – ஆர்.எஸ்.எஸ். சில் ஸ்வயம் சேவகராக சேர்ந்தார்.
 • 1942 – வெள்ளையனே வெளியேறு போராட்ட காலத்தில், ஹைதராபாத்திலுள்ள, தயாராம் கிடுமல் தேசிய கல்லூரியில் சேர்ந்தார்.
 • 1944 – கராச்சி மாதிரி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியிலமர்ந்தார்.
 • 12 செப், 1947 – பிரிவினையின்போது சிந்து மாகாணத்தை விட்டு ப்ரோபெல்லர் விமானத்தில் வெளியேறி, டெல்லி வந்து சேர்ந்தார்.
 • 1947-1951 – ஆர்.எஸ்.எஸ். கராச்சி கிளையில் செயலாளராக அல்வார், பரத்பூர், கோட்டா, பண்டி மற்றும் ஜலாவர் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பணிகளை ஒழுங்குபடுத்தினார்.
 • 1957ன் ஆரம்பத்தில்- வாஜ்பாயீ அவர்களுக்கு துணையாக பணிபுரிய டெல்லிக்கு குடிபெயர்ந்தார்.
 • 1958-63 – டெல்லி மாநில ஜன சங்கத்தில் செயலாளராக பொறுப்பேற்றார்.
 • 1960-1967 – ஜன சங்கத்தின் ஆர்கனைசர் பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
 • பிப் 25, 1965 – கமலாதேவி அவர்களை மணந்தார். (பிரதிபா மற்றும் ஜெயந்த் ஆகிய மக்களை பெற்றனர்).
 • ஏப் 1970 – மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • டிச 1972 – பாரதிய ஜனசங்கத்தின் தலைவரானார்.
 • 26 ஜூன் 1975 – எமெர்ஜென்சி காலத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் மத்திய சிறையில் ஜனசங்க உறுப்பினர்களுடன் அடைக்கப்பட்டார்.
 • மார்ச் 1977 to ஜூலை 1979 – மத்திய செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அமைச்சரானார்.
 • 1980-86 – பாஜகவின் பொதுச்செயலாளர் பதவி வகித்தார்.
 • மே 1986 – பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
 • 3 மார்ச் 1988 – மறுபடியும் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 • 1988 – பாஜக அரசில் உள்துறை பொறுப்பு வகித்தார்.
 • 1990 – ராம் ரத யாத்திரையை சோம்நாத்திலிருந்து அயோத்யாவிற்கு தொடங்கினார்.
 • 1997 – இந்திய சுதந்திரத்தின் பொன் விழாவை கொண்டாடும் வகையில் ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை மேற்கொண்டார்.
 • அக் 13 1999 – மே 13 2004- துணைப்பிரதமராக பதவி வகித்தார்.

Leave a Reply