2014 பொதுத்தேர்தல்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த 24 மணி நேரமும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின. பாஜகவை பலப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. கோர்க்கா ஜன்முக்தி மோர்சா டார்ஜீலிங்கிலும் வட வங்காளத்தின் சில தொகுதிகளிலும், பாஜகவிற்கு ஆதரவளிக்க முடிவெடுத்தது. இந்த ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு மேலும் உதவும். வங்காளத்தில் கூடுதலாக சில இடங்களை பெற இது உதவும்.

அதே நேரத்தில், அஸ்ஸாம் காண பரிஷத்தின் குறிப்பிடத்தக்க பிரிவான சந்தர் மோகன் பட்வாரி தலைமையிலான அணியும் பாஜகவில் சேர முடிவெடுத்தது. அங்கு லோக்சபையின் சில இடங்களில் பாஜக போட்டியிட்டு வந்துள்ளது. அஸ்ஸாமின் ஒரே காங்கிரஸ் எதிர்ப்பு கட்சியான பாஜகவில், அஸ்ஸாம் கண பரிஷத்தின் முக்கிய தலைவர்கள் இணைந்திருப்பது கட்சியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

தனி நபர்கள் மட்டுமல்ல,. தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட சில தென் மாநில கட்சிகளும் இணையவிருப்பதால் வரவிருக்கும் நாட்கள் பாஜகவுக்கும் தே.ஜ.கூட்டணிக்கும் மிக முக்கியமானதாக அமையும், இந்த முன்னேற்றங்கள் பாஜக அதிக பலமில்லாத கிழக்கு மற்றும் தென்மாநிலங்களிலும் கட்சிக்கு கூடுதல் வலு கூட்டும்.

இந்நிலையில் எதிர் கோஷ்டிகளான காங்கிரசிலும் ஆம் ஆத்மி கட்சியிலும் வேறு முக்கிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. மத்திய பிரதேச, பிந்த் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அதை நிராகரித்ததுடன், கட்சியை விட்டு விலகி பாஜகவிலும் சேர்ந்து விட்டார். ஆம் ஆத்மியால் செல்வாக்குள்ள பகுதியாக அவர்களால் சொல்லிக்கொள்ளப்பட்ட சண்டிகரில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண்மணி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு, தன் கட்சியின் தொண்டர்கள் ஒருங்கிணைப்பாக இல்லை என்றும் கட்சியும் அமைப்பு ரீதியாக ஆதரவாக இல்லை என்றும் கூறியுள்ளார். வெற்றி வாய்ப்புள்ள கட்சியுடன்தான் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள். தோற்கும் கட்சியுடன் யாரும் இருக்க விரும்புவதில்லை. அதனால்தான் கட்சி வேட்பாளராக மக்களிடையே அறிவித்த பின்னரும் இவர்கள் மறுத்துவிட்டார்கள். வேட்பாளர்களுக்கு தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் இந்த நிலை.

ஊடகங்களுக்கு ஆம் ஆத்மியுடனான தேனிலவு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தெரிகிறது. ஆம் ஆத்மி பற்றி ஊடகங்கள் அளவுக்கதிகமாகவே செய்திகள் வெளியிட்டாலும், மற்ற கட்சிகளை விட அதிகம் அவர்களின் தவறுகளை கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு கண்காணிக்க தொடங்கி விட்டார்கள். அதிகமான ஊடக அரவணைப்பால் நிஜ 'கள எதிரி' யான காங்கிரஸை விட, ஆம் ஆத்மியே பாஜகவின் 'தொலைக்காட்சி எதிர்ப்பாளராக' ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டார்கள்.

ஆவலுடன் மக்கள் பார்க்கும் ஒரு வீடியோ யூ-டியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், ஆம் ஆத்மி தலைவர் முன்னணி செய்தி சானலுக்கு பேட்டி கொடுத்துவிட்டு பின்னர் பேட்டி கண்டவருடன் பேசிக்கொண்டிருக்கிறார். இருவரும் எங்கு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றியும் பேட்டியை கத்தரிப்பது குறித்தும் பேசுகிறார்கள். அந்த வீடியோவில் அவர்கள், பேட்டியின் எந்தப்பகுதியை முன்னிறுத்துவது என்றும், மத்தியதர மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளை அமுக்கி வாசிப்பது என்றும் விவாதிக்கின்றனர். எங்களுக்கு இந்த அதிர்ஷ்டத்தை எந்த செய்தியாளரோ, ஊடக நிறுவனமோ வழங்கியதில்லை. நட்பான, திருட்டுத்தனமான  பேட்டிகளால் மக்கள் முன் தன் பிம்பத்தை உயர்த்தி காட்டுவதுதான் ஆம் ஆத்மியின் வியூகம் எனலாம். அவர்கள் தங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மாயையை பொய் பிம்பத்தை தான் காட்டுகிறார்கள். உண்மையும் மாயையும் ஒன்றுக்கொன்று பொருந்தாதது. புண்ணியம் பாவத்தை சந்திக்கையில் நீங்கள் அங்கே 'சதி'யை எதிர்பார்க்க முடியாது.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Tags:

Leave a Reply