லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம்செய்ய உள்ளதாக தமிழக பாஜக., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக பாஜக., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கூட்டணி கட்சிகள் பிடிவாதம் ஏதும் பிடிக்க வில்லை. தங்களது விருப்பத்தைமட்டுமே தெரிவித்துள்ளன. நாளைக்குள் தொகுதிபங்கீடு ஏற்படும். கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டபின் பாஜக., வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிபங்கீடு ஆகியவற்றை பாஜ., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவிப்பார். தமிழகத்தில் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம்செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply