மகாத்மாகாந்தி படுகொலையில் ஆர்எஸ்எஸ்.,க்கு தொடர்பு இல்லை என பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி படுகொலையின் போது ஆர்எஸ்எஸ். இயக்கம்மீது எப்படியெல்லாம் காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது என்பதை காந்தியின்பேரன் ராஜ்மோகன் காந்தி தமது புத்தகத்தில் விவரித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த புத்தகத்தில் சர்தார்படேல், ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் காந்திகொலை சம்பவத்தில் ஆர்எஸ்எஸ்.இயக்கத்துக்கு தொடர்பு இல்லை என எழுதப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது . இதேபோல் ராஜ் மோகன் காந்தியின் புத்தகத்தை தமது கட்டுரையில் பலஇடங்களில் மேற்கோள்காட்டி, ஆர்எஸ்எஸ். இயக்கத்துக்கும் காந்தி படுகொலைக்குமே தொடர்பில்லை என்று அத்வானி பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply