பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி மிகவும் தகுதியானவர் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியோ, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலோ பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும் பிரபல மூத்தவழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வழக்கறிஞர்கள் ஏற்பாடுசெய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். அறிவார்ந்த தளத்தில் இயங்குவதற்கான போதியதிறன் ராகுல்காந்திக்கு இல்லை , பிரதமர் பதவிக்கு அவர் ஏற்றவர் அல்ல.

நரேந்திரமோடியிடம் ஆதாயம் பெறவேண்டும் எனும் நோக்கம் எனக்கில்லை , நாட்டின் நலன்கருதியே அவர் பிரதமராக வர வேண்டும் என விரும்புகிறேன். காங்கிரஸ்க்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் நோக்கத்துடனேயே ஆம் ஆத்மி களத்தில் இறங்கி உள்ளது, அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனே இதனை என்னிடம் தெரிவித்துள்ளார் என்றும் ராம் ஜெத்மலானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply