ஈரோடு சூளைபகுதியை சேர்ந்த தீவிர காந்திய சிந்தனையாளரான சண்முக காந்தி (வயது 75). நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

4 முழவேட்டி, கண்ணாடி கையில் ஒருகம்புடன் எப்போதும் சுற்றி கொண்டிருப்பார்.ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவுடன் ஊழல் எதிர்ப்புபோராட்டத்தில் இவர் கலந்துகொண்டார். சமீபத்தில் குஜராத் காந்தி ஆசிரமத்திற்கு சென்றிருந்தார். அப்போது குஜராத்தில் நரேந்திர மோடி செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை பார்த்துவியந்த சண்முககாந்தி அவருக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய தொடங்கி விட்டார்.

மோடி உருவபடத்துடன் மொபட்டில் சென்று ஈரோடு தெருக்களில் பிரசாரம்செய்து வருகிறார்.
இதுபற்றி சண்முக காநதி கூறும்போது, நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். இந்தியாவின் விடுதலையை பெற்றுதந்த காந்திஜி குஜராத்தில் அவதரித்தார். நரேந்திர மோடியும் குஜராத்தில் பிறந்துள்ளார். குஜராத்தில் மோடி மதுவிலக்கினை அமல்படுத்தி சிறந்த ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.

அவர் நாட்டின் பிரதமர் ஆனால் நாடுநிச்சயம் முன்னேறும். நாடு விடுதலைபெற்ற பின்னர் 1948ல் காந்திஜி காங்கிரசை கலைக்கசொன்னார். ஆனால் காங்கிரசார் 67 ஆண்டுகள் ஆகியும் கட்சியை கலைக்கவில்லை. இன்றைய காங்கிரசின் தலைமை நன்றாக செயல்பட்டாலும் மற்றவர்கள் ஊழல் மற்றும் சுய நலவாதிகளாக இருக்கிறார்கள். மோடி பிரதமரானால் நேர்மை, சத்தியம் தவறாமல் காந்தியவழியில் நல்லாட்சி தருவார். என்று அவர் கூறி னார்.

Leave a Reply