பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி, உ.பி., மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவார்’ என்று பாஜக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

நரேந்திரமோடி, பாஜக., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே, அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.

நாட்டிலேயே அதிகப்படியான எம்.பி.,க்களை தேர்வு செய்யும் உ.பி.,மாநிலத்தில் இருந்து அதிகப்படியான எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டால்தான், பாஜக லட்சியமான தனிமெஜாரிட்டியை பெற முடியும் . எனவே, ‘பிரதமர் வேட்பாளரான மோடியும், உ.பி.,யில் தேர்தல்களம் இறங்கினால், அதன் தாக்கம் அந்தமாநிலம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் இருக்கும்’ என்று, கருதினர்.அதற்கு தகுதியானதொகுதியாக தேர்வு செய்யப்பட்டதுதான், வாரணாசி

பா.ஜ., தேர்தல்குழு கூட்டம், நேற்றிரவு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் மோடி, மூத்த தலைவர் அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மாசுவராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி துணைத்தலைவர் அனந்த்குமார் அறிவித்தார்.பாஜக., பிரதமர்வேட்பாளர் மோடி, வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி, கான்பூரில் இருந்தும், வருண்காந்தி, சுல்தான்பூரில் இருந்தும், மேனகா காந்தி, பிலிபித் தொகுதியில் இருந்து போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உமா பாரதி ஜான்சி தொகுதியில் இருந்தும், உத்தரா கண்ட் முன்னாள் முதல்வர் கோசியாரி நைனிடால் தொகுதியில் இருந்தும் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 13 பேர் பிரதமர்பதவி வகித்துள்ளனர். இவர்களில் 8 பேர் உ.பி., தொகுதிகளில் போட்டியிட்டு தேர்வாகித் தான் பிரதமராக வந்துள்ளனர். இதனால்தான் நரேந்திரமோடி உ.பி.,யில் போட்டியிடுகிறார் எனும்கருத்து உள்ளது. வாரணாசியை சுற்றி பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் ம.பி., ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. மோடி அங்கு போட்டியிட்டால் அம்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றலாம் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Leave a Reply