பாஜக., — தேமுதிக., கூட்டணி, தமிழகத்தின் முதல் அணியாகமாறி, 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்,” என்று , தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ் கருத்து தெரிவித்துள்ளார். .

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது ; பா.ஜ.,வுடன், தேமுதிக., கூட்டணி அமைக்க போவதாக தகவல் வெளியானதில் இருந்தே, அதிமுக., – – திமுக.,வினரின் வயிற்றில், புளிகரைக்க ஆரம்பித்து விட்டது. தற்போது, பாஜக.,வுடன் தொகுதிபங்கீடு பேச்சு முடிவடைந்து உள்ளது. தேமுதிக.,விற்கு திருவள்ளூர் (தனி), மத்தியசென்னை, வட சென்னை, நெல்லை, மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் (தனி), கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகள், ஒதுக்கப்பட உள்ளன. எங்கள் கூட்டணி, தமிழகம், புதுவையில், 40 தொகுதியிலும் வெற்றிவாகை சூடும். அதிமுக.,- – திமுக.,வை வீழ்த்த பாஜக., கூட்டணிகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவர்.

நரேந்திரமோடி பிரதமரானால் மட்டுமே, நாடுவல்லரசாகும். குஜராத் மாநிலத்தைபோல, அனைத்து மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்லவும், ஊழலை ஒழிக்கவும், மோடி ஒருவரால்மட்டுமே முடியும். இந்தகோஷத்தை முன்வைத்து, நாங்கள் பிரசாரம்செய்வோம். என்று சுதீஷ் கூறினார்.

Leave a Reply