நாட்டில் ஊழலை ஒழிக்க நரேந்திரமோடியால் மட்டுமே முடியும். அவர் தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லதுசெய்வார் என்ற நம்பிக்கையோடு நானும், கூட்டணி கட்சிகளும் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் தே.மு.தி.க தலைவர் விஜய காந்த்.

இது தொடர்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; பா.ஜ.க.,வுடன் தே.மு.தி.,கவின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தியா வல்லரசு நாடாகவேண்டும் என ஆசைப்பட்டோம். நாடுவல்லரசாக வேண்டுமெனில் ஊழல் இருக்கக்கூடாது. ஊழலை ஒழித்திடுவோம், ஊழல் எதிர்ப்புமாநாட்டை முதன் முதலில் நடத்தியது தேமுதிக. அந்த ஊழலை எதிர்க்கும் ஒரே சக்தி நரேந்திரமோடிதான்.

குஜராத் மாநிலம் மோடியால் வேகமானவளர்ச்சி அடைந்துள்ளதை நேரடியாக பார்த்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த நம்பிக்கை என்றும் கெடாமல் இருக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையோடு தே.மு.தி.க.,வும், கூட்டணி கட்சிகளும் இணைந்துள்ளோம்.

பாஜக ஆட்சியில் நாடுமுழுவதும் தங்க நாற்கரச்சாலை போடப்பட்டது. அந்தசாலை மக்களுக்கு பயன் படுகிறது. அப்படி மக்களுக்கு பயன் படும் வகையில் நல்லது நடக்கவேண்டும் என்பதற்காகவே உங்களிடம் வாக்குகேட்க வந்திருக்கிறேன்.

கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார் எங்குநிற்கிறார்கள் என்பதை அறிவிப்பார்கள். பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என எண்ணாமல் அவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வேன். எனக்கு பிடித்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள் தான். அவர்களுக்கு நல்லது நடக்கவேண்டும்’ என இவ்வாறு விஜய காந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Leave a Reply