இரண்டு நாட்களாக NDTV செய்தி சானல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. Psephology எனும் தேர்தலாய்வு அறிவியல் இந்தியாவில் இன்னும் சீர்படுத்தப்படவில்லை. கணிப்புகளின் துல்லியத்தன்மையை என் அனுபவம் ஏற்றுக்கொள்வதில்லை. மதிப்புக்குரிய சில நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை மொத்தமாக சீர்தூக்கிப்பார்த்தால் பாஜகவின் தே.ஜ.கூட்டணி தான்

முன்னிலை வகிக்கும் என்பது தெளிவாகிறது. முடிவுகளில் பாஜகவுக்கும் காங்கிரசுக்குமான இடைவெளி குறிப்பிடத்தகுந்தது. மிகப்பெரிய அளவில் நரேந்திர மோதியை பிரதமராக ஏற்றுக்கொள்கிறார்கள். கட்சியைவிட அவரை ஏற்றுக்கொள்ளும் மதிப்பீடு அதிகம்.

இரு அடிப்படையான அரசியல் விவாதங்கள் தேர்தலில் மையமாக உள்ளது. முதலாவது, அதிக எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்தாலும், 272+ எனும் மேஜிக் எண்ணை எட்டிப்பிடிக்குமா? இரண்டாவது, மூன்றாம் அணி, பெடரல் அணியையும் சேர்த்தாலும், ஐ.மு.கூட்டணிக்கு கிடைக்கும் எண்ணிக்கை, தே.ஜ.கூட்டணியைவிட அதிகம் இருக்குமா?.

பாஜகவினரான நாம் எதில் கவனம் செலுத்தவேண்டும்? வாக்கு கேட்கவோ, மக்கள் மனதில் இடம்பெறவோ காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இந்த கணிப்புகளின்படி, பிராந்திய கட்சிகளான அஇஅதிமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதாதள் போன்றவை தத்தம் இடங்களை அவரவர்கள் மாநிலங்களில் தக்கவைத்து கொள்வார்கள். பாஜக எதிர்ப்புக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியான இடது முன்னணியும் சுருங்கிவிடும். விரிவாகும் வாய்ப்பும் இல்லை. காங்கிரஸ் எதிர்ப்பு பிராந்திய கட்சிகள் அரசியல் வெற்றிடத்தை குறிப்பிடத்தக்க அளவில் இன்னும் அடையவேண்டியுள்ளது.

என் சொந்த ஆய்வின்படி, நாம் மெதுவாக ஆனால் கண்டிப்பாக, 272+ மேஜிக் எண்ணை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். கடைசி சுற்று பிரசாரம் துவங்கி விட்டது. பாஜக தனக்கு கிடைக்கும் ஆதாயங்களை பலப்பப்படுத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். பாஜக அமைக்கும் அரசு அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். இன்றிலிருந்து தேர்தல் நாள் வரை, தேசம் முழுவதுமுள்ள ஒவ்வொரு பாஜக தலைவனும் தொண்டனும் கூடுதலாக 2% வாக்குகள் பெறுவதை குறிக்கோளாக கொண்டு உழைக்க வேண்டும். கூடுதலாக கிடைக்கும் ஒவ்வொரு சதவீத வாக்கும் நாம் பெரும் இடங்களின் எண்ணிக்கையை மிகவும் கூட்டும். இந்த கூடுதல் வாக்கை பெற என்ன செய்ய வேண்டும்?

பொதுக்கூட்டங்கள், விளம்பரம், தொடர்பு போன்ற எல்லா ஊடங்கங்களையும் திறம்பட பயன்படுத்த வேண்டும். இலக்கிலிருந்து பார்வையை திசைதிருப்பக்கூடாது. ஆளும் ஐ.மு.கூட்டணியினால் சந்திக்கும் பிரச்னைகளையும், பாஜகவின் திறனையும், தேசம் சந்திக்கும் சிக்கல்களுக்கு நரேந்த்ர மோதி தரும் தீர்வுகளையும் எடுத்துரைக்கும் அரசியல் பொது விவாதங்களை தொடர வேண்டும். ஆளும் ஐ.மு.கூட்டணியினால் சந்திக்கும் பிரச்னைகளான, மாற்றத்தை விரும்பும் மக்களின் விருப்பங்களான, விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை, விவசாயிகளின் பிரச்னைகள், ஊழல், தேசப்பாதுகாப்பில் பலவீனங்கள் ஐ.மு..கூட்டணியின் தலைமை வெற்றிடம், வாக்காளர்களின் மனவோட்டம் போன்றவையே நம் முக்கிய விவாதப்பொருட்களாகும். மோதியின் அரசு இக்கவலைகளுக்கு தீர்வாளிக்கும் என நாம் எல்லோரும், முழுகவனம் செலுத்தி விளக்க வேண்டும். மாறாக, யார் வேட்பாளராக்கப்பட்டார் யாரை நிறுத்தவில்லை போன்ற சாதாரண விஷயங்கள், பாஜகவின் அரசியல் திட்டங்களை ஆக்ரமிக்கும் அளவுக்கு போய்விடக்கூடாது. இவை முக்கிய பிரச்னைகளிலிருந்து நம்மை திசை திருப்பிவிடும்.

மோதியின் தூய்மை மற்றும் ஐ.மு.கூட்டணியினால் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை விட மக்களை பாதிக்கும் பெரியகேள்வி – 'யார் நிலையான ஆட்சி தருவார்கள்?'. இதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அவ்வளவு நாம் முன்னிலை வகிக்கும்  பலனைபெறலாம். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்குமாறு செய்யவேண்டும். சிறு குழுக்களுக்கு வாக்களிப்பது அரசமைக்க போதுமானாதாக இருக்காது. ஐந்து ஆண்டுகள் அரசாளும் கட்சிதான் இந்தியாவின் தேவை. இன்றைய குழப்பத்திலிருந்து நாட்டை மீட்காவிட்டால், நிலையான அரசு என்பதை முன்னெடுத்து செல்லமுடியாத நிலை தோன்றிவிடும்.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply