இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியமைய, நரேந்திர மோடி பிரதமராக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .

விஜயகாந்த் கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல்பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களிடையே பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது .

20 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, ஓசூர்வழியாக பெங்களூர் சென்றுள்ளேன். அப்போது ஓசூரில் ஏராளமான சிறுதொழிற்சாலைகள் இருந்ததை பார்த்து வியந்துள்ளேன் . இன்று அந்த தொழிற்சாலைகளின் நிலை என்ன? அனைத்து தொழிற்சாலைகளும் நலிவடைந்துள்ளன. காரணம் என்ன? மின்சாரம் இல்லை. தொழிற்சாலை உரிமையாளர்கள் வங்கியில் வாங்கியகடனை திருப்பி கட்ட முடியாமல் உள்ளனர். தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை தொடங்குவேன் என்றார்கள். ரயில்நிலையம் அமைப்பதாக கூறினார்கள். இந்தமாவட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என 3 மாநில எல்லையில் உள்ளது. ஆனால் ரயில்போக்குவரத்து இல்லை.

இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமேமுடியும். இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்றார்

Leave a Reply