பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்திலிருந்தும் போட்டியிடவேண்டும் என்று மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாரணாசியில் பாஜக பிரசாரம் களை கட்டியுள்ளது. மோடியை போன்று ஒத்த உருவம்கொண்ட ஒருவர் திடீர் என வாரணாசியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரம்மேற்கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நரேந்திரமோடியே நேரடியாக வாக்குசேகரிக்க வந்து விட்டாரோ என்று பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். புனிதஸ் தளமனா வாரணாசியில் படகுசவாரி செய்து பக்தர்களிடம் நேரடியாக வாக்குசேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாரணாசியில் மோடி அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி என்றார்

Leave a Reply