விருது நகர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய திருப்பரங் குன்றம், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்றன.

கூட்டத்தில் மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் திமுக. மீது அதிருப்தி அடையும்போது அதிமுக.விற்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். அதிமுக. மீது அதிருப்தி அடையும் போது திமுக. விற்கு வாக்களிக்கிறார்கள். இந்த அதிருப்தியால் இதற்கு அப்பாற்பட்டு வாக்களிக்க நினைக்கிறார்கள்.

ஆனால் அந்த ஓட்டு சிதறிவிடக் கூடாது, வீணாகி விடக் கூடாது என்பதால் அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். இந்தமாதிரியான எதிர்மறை நேற்றுவரை இருந்தது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக., அதிமுக. இல்லாத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். புதியவிடியலாக இந்தியாவில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எனவே எங்களுக்கே வெற்றி உறுதி.

தமிழகத்தை தவிர்த்து தனியாக 250 இடங்களில் பாஜக வெற்றிபெறும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நரேந்திரமோடியிடம் வலியுறுத்தி உள்ளேன். அதை செய்வார் என்று நம்புகிறேன் என்றார்.

Leave a Reply