நரேந்திர மோடிக்கு கூடும்கூட்டம் ஆச்சரியப்படுத்துகிறது. நானே வண்டலூருக்கு மோடி வந்த போது கூடிய கூட்டத்தைப்பார்த்து மிரண்டுவிட்டேன். அவர் பிரதமரானால் அதற்கு நான் ஆதரவு தருவேன் என மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது ; நரேந்திர மோடி குஜராத் முதல்வர். நல்ல நிர்வாகி. அதனால் தான் நல்ல முதல்வராக அவரால் இருக்க முடிகிறது. வண்டலூரில் நடந்த மோடிகூட்டத்தை நான் பார்த்தேன். அப்போது கூடிய கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். நான் எங்குபோனாலும் இளைஞர்கள் மத்தியில் மோடிகுறித்த பேச்சாகத்தான் உள்ளது. ஒரு எம்.பியாக, பிரதமராக அவரைத் தேர்வுசெய்வதற்கு நான் ஆதரவு தருவேன் என்றார் அழகிரி.

Leave a Reply