தமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. இக்கூட்டத்திற்கு விஜய காந்த் ,வைகோ, அன்புமனி ராம்தாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த தமிழக கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் நன்றி கூறினார். கூட்டணி அமைய தமிழருவி மணியனுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு அறிவிக்கப்பட்டது.

அதில் தே.மு.தி.க.,வுக்கு 14 தொகுதிகள் பா.ம.க.,வுக்கு 8 தொகுதிகள் பாரதிய ஜனதாவுக்கு 8 தொகுதிகள் மதிமுகவுக்கு 7 தொகுதிகள் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி என அறிவிக்கப்பட்டது.

தேமுதிக : திருவள்ளூர், மத்திய சென்னை, வட சென்னை கள்ளக் குறிச்சி. சேலம் திருச்சி திண்டுக்கல் மதுரை, கடலூர் , நெல்லை விழுப்புரம் நாமக்கல் கரூர் திருப்பூர்

பாமக : அரக்கோணம் கிருஷ்ணகிரி தருமபுரி ஆரணி சிதம்பரம் மயிலாடுதுறை திருவண்ணாமலை நாகை
பாஜக : தென்சென்னை, வேலூர், கோவை, சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி.
மதிமுக தொகுதிகள் : காஞ்சிபுரம் ஈரோடு தேனி விருதுநகர் ஸ்ரீபெரும்புதூர் தூத்துக்குடி தென்காசி

இந்திய ஜனநாயக கட்சி : பெரம்பலூர் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி : பொள்ளாச்சி

Leave a Reply