எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக.அழகிரியின் ஆதரவு பாஜக.வுக்கு லாபகரமாக அமையும் என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது .

பாஜக.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதில்அளித்த முரளிதர் ராவ், ‘அழகிரி ஒருமுக்கியமான நபர், அவரிடம் பலம் உள்ளது. எனவே, அவரிடம் நாங்கள் ஆதரவுகேட்கிறோம். எல்லோரிடமும் கேட்டு வருகிறோம். ஒவ்வொருவருடைய பங்களிப்பும் எங்கள் பிரசாரத்தை பலம்வாய்ந்ததாக மாற்றும்.

புதியநபர்களிடம் இருந்தும், புதிய அமைப்பிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவு என்பது எப்போதுமே லாபகரமானது தான்’ என்று பதில் அளித்தார்.

Leave a Reply