பாஜக., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் என்னை தொடர்புகொண்டு, குஜராத் மாநில பாஜக.,வினர், நான் காந்திநகர் தொகுதியில் போட்டியிடவேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்னை சந்தித்து காந்தி நகர் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், ம.பி., மாநில பாஜக.,வினர் நான் போபால் தொகுதியில் போட்டியிடவேண்டும் என விரும்புவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். எனக்காக போபால் மற்றும் காந்தி நகர் என இரண்டு தொகுதியையும் விட்டுக்கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் கடந்த 1947ம் ஆண்டு கராச்சியிலிருந்து இந்தியாவந்ததில் இருந்து குஜராத் மாநிலத்துடன் தொடர்புவைத்துள்ளேன்.

இந்த மாநிலத்தில் இருந்து லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். காந்தி நகர் தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறேன். இந்த தேர்தலிலும் காந்தி நகர் தொகுதியிலேயே போட்டியிடுவேன். எனது முடிவை ராஜ்நாத்சிங்கிற்கு தெரியப்படுத்தியுள்ளேன். நான் போபாலில் போட்டியிட விரும்பிய மபி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், கைலாஷ் ஜோஷி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply