நரேந்திர மோடி அவர்கள் 20.3.2014 அன்று மகாராஷ்ட்ராவில் உள்ள வார்தாவில் ஆற்றிய உரையிலிருந்து.  “விவசாய விளை பொருட்கள் சரக்கு இரயில்களின் மூலமாக விரைந்து கொண்டு செல்லப்பட நாம் ஆவன செய்ய வேண்டும்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான் ‘ என்ற கோஷம் தானிய உற்பத்தியைப் பெருக்கும் உத்வேகத்தை விவசாயிகளுக்கு அளித்தது.

ஆனால் இப்போதைய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அரசின் மோசமான ஆட்சியால் இன்று விவசாயத்துறையும் , நாடும் சீரழிந்து விட்டன .

நமது ராணுவ வீரர்களின் தலைகளைப் பாகிஸ்தான் வெட்டுகிறது .

விவசாயிகளும் சரி, இராணுவ வீரர்களுக்கும் சரி இந்தக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் பாதுகாப்பில்லை . இன்றுள்ள நிலைமையில் விவசாயிகள் நமது விவசாய அமைச்சரின் மீது நம்பிக்கை கொள்ள முடியுமா?

பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கும் நிலையில் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு விவசாயிகள் இறந்து கொண்டிருக்கின்றனர். விவசாயத்துக்கு இங்கு சிறந்த வாய்ப்புள்ளது. ஆனால் ஏன் இந்த நிலைமை? , பருத்தி உற்பத்தி பெருகியுள்ளது .உலகம் முழுதும் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளது. பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது – இப்படி இருந்தும் ஏன் பருத்தி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது?’ விவசாய அமைச்சர் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இது யாரை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை?
யார் நன்மைக்காகச் செய்யப்பட்டது?

விவசாயிக்கு வருமானம் கிடைத்தால் இந்த அரசுக்குக் கசக்கிறது .
ஆனால் மாமிசம் எற்றுமதி செய்பவர்களுக்கு இந்த அரசு மானியம் தருகிறது!

நான் விவசாயிகளுக்கு உறுதி மொழி அளிக்கிறேன்” பாரதீய ஜனதா கட்சி விவசாயத்துறையில் பெரும் மாற்றம் கொண்டு வர உறுதி பூண்டிருக்கிறது.

அதிக வட்டிக்கு கந்து வட்டிக்காரர்களிடமிருந்து விவசாயிகள் கடன் வாங்கும் நிலையை நாம் மாற்றுவோம். விவசாயிகளின் வருமானத்தையும், கிராம மக்களின் வாங்கும் திறனையும் அதிகரிக்க நாம் ஆவன செய்வோம்”

Leave a Reply