பாரதீய ஜனதா கட்சி பிரதிநிதிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்து தங்கள்கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

புலனாய்வு துறையின் தகவலையும் ஊடக செய்தி களையும் அடிப்படையாக கொண்டு பாஜக தலைவர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் தங்கள்கட்சி தலைவர்களுக்கு கூடுதல்பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply