வளர்ச்சியின் தூதராக பாஜக பிரதமர் பதவிவேட்பாளர் மோடி திகழ்கிறார் அச்சத்தின் சின்னமாக அவர் திகழவில்லை” என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்

இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

வளர்ச்சியின் தூதராக நரேந்திரமோடி திகழ்கிறார். அச்சத்தின் சின்னமாக அவர் திகழவில்லை. மக்களவைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.,வில் முஸ்லீம்களுக்கு போதியவாய்ப்பு அளிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. சுயநல நோக்கத்துடன் அது போன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று எழுதப்பட்டுள்ளன. பல இடங்களில் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள், அந்த எழுத்துகள் மீது மோடியை தவறாக சித்தரித்து படம்வரைந்து விட்டு செல்கின்றன. இந்த செயலுக்காக அக்கட்சிகளை பா.ஜ.க கண்டிக்கிறது.

சிறுபான்மை சமூகத்தினரான முஸ்லீம்கள், சமூகரிதியில் அனைத்து வித முன்னேற்றமும் பெறவேண்டும். அரசியலிலும் போதியபலம் பெற வேண்டும்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்ததும், அவர்களுக்கு தாங்கள் அடைந்த இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கும்.

சில அரசியல்கட்சிகள், தேர்தலில் போட்டியிட முஸ்லீம்களுக்கு இடம் தருகின்றன. ஆனால் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வித் துறையில் முஸ்லீம்கள் முன்னேற்றம்பெறும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த அக்கட்சிகள் உண்மையான அக்கறை காட்ட வில்லை. எனவே அவர்களுக்கு உதவும்வகையில் பா.ஜ.க புதிதாக இயக்கத்தை ஆரம்பித்துள்ளது என்று நக்வி கூறினார்.

Tags:

Leave a Reply