ராஜஸ்தானில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் 250 கிலோ வெடிப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல்நெருங்கும் நேரத்தில் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊடுருவி முக்கிய தலைவர்களை தாக்கலாம் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் மோடியை குறிவைத்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பைச்சேர்ந்த தீவிரவாதிகள் மோடி போட்டியிடும் வாரனாசியில் நோட்டம் பார்த்துள்ளனர்.

அவர்கள் தேர்தல்நேரத்தில் வாரனாசியை தாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச்சேர்ந்த தீவிரவாதி கைதுசெய்யப்பட்டான். அவனிடம் இருந்து 250 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் ஜெய்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் பலதீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் கயா, பாட்னா, ஹைதராபாத்தின் ஜாவேரி பஜார் மற்றும் தில்சுக் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய வாக்கஸ் என்ற அகமதுஜாவிதும் ஒருவன். அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply