கைதுசெய்யபட்ட நான்கு இந்தியன் முகாஜிதின் அமைப்பைசேர்ந்த தீவிரவாதிகளும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கொல்ல திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலை அடுத்தும், மத்திய அரசு பா.ஜ.க தலைவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கமறுக்கிறது என்றும் பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.,வின் செய்திதொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, கைதுசெய்யப்பட்ட நான்கு தீவிரவாதிகளும் மோடிமீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது நமது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டசவால். பிற நாடுகளில் உள்ளது போன்று தேசிய பாதுகாப்பில் நாம் ஒருமித்த கருத்துடன் செயல்படவேண்டும். தீவிரவாதிகள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க கடுமையான சட்டங்கள் தேவை. தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை பிரத்தியோகமான சட்டம் இல்லாமல் நமது நாடுமட்டும் தான் விசாரிக்கிறது.எங்களுக்கு வாக்கு அளித்து ஆட்சிக்கு வரசெய்தால் இதற்குதேவையான நடவடிக்கைகளை பாஜக எடுக்கும் .என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த இந்தியன் முகாஜிதின் தீவிரவாதி வாகாஸ் உள்ளிட்ட நான்குபேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply