அமைச்சர்கள் தன்காலில் விழுந்து கும்பிடுவதை பார்த்து முதல்வர் ஜெயலலிதா ரசிக்கிறார் என்று தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் எல்லாம் பொத்து பொத்தென்று காலில்விழுவதை மாண்புமிகு அம்மா அவர்கள் ரசிக்கிறார் என்றும் திருச்சியில் பிரச்சாரம்செய்த விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருச்சி காஜாப் பேட்டை பகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய்குமாரை ஆதரித்து விஜய காந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''கடந்தமுறை வெற்றிப் பெற்றவர்தான் திருச்சியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். எல்லாம் செய்துதருவதாக கூறிய எம்பி மீண்டும் ஓட்டுக்கேட்டு வருவார். இப்பவும் அதையேசொல்லுவார். எதுவும் செய்யமாட்டார். மின்சாரம், வேலை வாய்ப்பு, குடி நீர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையானதை செய்யாத அதிமுக.விற்கும் திமுக.வுக்கும் ஓட்டுபோடாதீங்க.

காவிரி டெல்டாவில் மீத்தேன்வாயு திட்டத்தில் முதலில் கையெழுத்திட்டது திமுக. இப்போது, அந்த திட்டத்திற்கு எதிர்ப்புதெரிவிக்கிறது. கருணாநிதி ஐந்து முறையும், மூன்று முறை ஜெயலலிதாவும் முதல்வராக இருந்து நாட்டை கெடுத்து விட்டனர். இந்த இரண்டுபேரையும், இரண்டு கட்சியையும் நாட்டைவிட்டே விரட்டணும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. குறிப்பாக திருச்சியில் மிகமோசமாக உள்ளது. நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொலையாளிகளை கண்டுபிடிக்க வில்லை. ஸ்காட்லாந்துக்கு அடுத்த படியாக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்காமல் தடுமாறுகிறது. அம்மாகுடிநீர், அம்மா உணவகம்னு பேருவச்சீங்களே அதைப்போல டாஸ்மாக் கடைகளுக்கும் 'அம்மா டாஸ்மாக்' என பெயர் வைக்க வேண்டியது தானே. சட்ட சபையில் அனைவரும் ஜால்ரா அடிக்கிறார்கள்.

ஜெயலலிதா போகும்போது, ஆளும்கட்சி எம்எல்ஏ.க்கள், அமைச்சர்கள் வரிசையாக நின்று தரையை பார்ப்பார்கள். ஏன் இங்கு நிற்கிறீர்கள், அனைவரும்போய் உங்களது துறை சம்மந்தமான வேலையை பாருங்கள் என்று சொல்லலாம் இல்லையா? ஆனால், சொல்லமாட்டாங்க. ஏன் என்றால் அமைச்சர்கள் குனிந்து கும்பிடுபோடுவதை அவங்க ரசிக்கிறாங்க. அவர்களை இப்படி பார்ப்பதில் அவருக்கு ஆசை அதிகம்" என்று பேசியுள்ளார் அவர்.

Tags:

Leave a Reply