ஹர ஹர மகாதேவா என்ற கோஷம், சிவ பெருமானுக்கு சொந்தமானது. மோடியை புகழ்வதற்கு, அதை பயன் படுத்த வேண்டாம்,” என்று , துவாரகா சங்கராச் சாரியார், சொரூபானந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார் .

இந்நிலையில் இதை ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி, ”இனிமேல், பிரசாரங்களில், என்னை புகழ்வதற்காக, ஹரஹர மோடி என்ற கோஷத்தை பயன் படுத்த வேண்டாம்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் ‘ஹர ஹர மோடி’ என்ற கோஷத்தை, பாஜக., தொண்டர்கள் பயன் படுத்த வேண்டாம். கட்சிமீதும், என் மீதும், பாசம் வைத்துள்ள சிலதொண்டர்கள், பிரசாரத்தின் போது, இது போன்ற கோஷங்களை எழுப்புகின்றனர். அவர்களின் பாசத்துக்கு கட்டுப்படுகிறேன். ஆனால், இதுபோன்ற துதிபாடும் கோஷங்கள் எழுப்புவதை, தொண்டர்கள் கைவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply