இந்நாட்டை யாருக்கும் அடிபணிய விட மாட்டேன் என்று பாஜக வெளியிட்டுள்ள ‘சபதம்’ பாடலில் நரேந்திர மோடி முழங்கியுள்ளார்

தேர்தல் பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக பா.ஜ.க கீதம் என்ற பெயரில் ஒருபாடலை பாஜக வெளியிட்டுள்ளது அதன் குறுந்தகட்டை பாஜக.,வின் மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் ‘பாரத வெற்றிப்பேரணி’ தொடக்க விழாவில் வெளியிட்டனர்.

இந்த ஆல்பத்தின் சிறப்பே, நரேந்திர மோடி தனது குரலில் சிலவரிகளை வாசித்திருப்பதுதான். சிலவரிகளை லேசாக ராகம்போட்டும் படித்துள்ளார் மோடி.

அவரது குரல் இந்த ஒற்றைப்பாடல் ஆல்பத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்துள்ளது. சௌகந்த் – மெய்ன் தேஷ் நஹின் ஜூக்னே தூங்க்கா… (சபதம் – என் தேசத்தை தலைகுனிய விடமாட்டேன்!) என்ற தலைப்பில் இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது.

இந்த ஆல்பத்தில் நரேந்திரமோடி படித்துள்ள கவிதைவரிகளின் தமிழாக்கம் இது: என் நாட்டை புழுதியில் மங்கிப்போக விடமாட்டேன் என இந்த மண்ணில் சபதம் ஏற்கிறேன்… ஆனால் இந்ததேசத்து மக்கள் விழித்துக் கொண்டனர், ஒவ்வொரு இந்தியனும் வெல்வான்.. இந்ததேசத்தை யாருக்கும் அடிபணிய விடமாட்டேன்… யார்முன்னும் தலைகுனிய விடமாட்டேன்!

Leave a Reply