பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தானின் ஏஜென்ட்போல் செயல்படுவதாக நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள ஹிரா என்ற இடத்தில் நடைபெற்ற பாஜக.,வின் தேர்தல் பொதுக் கூட்டத்தி்ல் கலந்துகொண்டு பேசிய அவர், அந்தோணியும், கெஜ்ரிவாலும் இந்தியாவின் எதிரிகள் என்று சாடினார்.

மூன்று ஏகே-க்கள் பாகிஸ்தானின் தனித்தன்மைவாய்ந்த பலமாகிவிட்டனர். காஷ்மீரில் ரத்தக் களறியை ஏற்படுத்த பயன் படுத்தப்படும் ஏகே -47 ரக துப்பாக்கியின் முதல் இரண்டு எழுத்துகளான ஏ.கே பாகிஸ்தானின் முதல்பலம்.

பாகிஸ்தான் ராணுவ உடையில்வந்தவர்கள் இந்திய வீரர்களின் தலையைக் கொய்து சென்றதாக அறிக்கைவிடுத்த பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியின் முதலெழுத்துகளான ஏகே, பாகிஸ்தானின் இரண்டாவது பலம்

காஷ்மீர், பாகிஸ்தானில் இருப்பதுபோன்ற வரைபடத்தை தனது கட்சியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி அரவிந்த்கெஜ்ரிவாலின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துகளான ஏகே, பாகிஸ்தானின் மூன்றாவது பலமாகும் என்றும் மோடி விமர்சனம்செய்தார்.

அந்தோணியும், கெஜ்ரிவாலும் பாகிஸ்தானின் விருப்பத்திற்கேற்ப பேசிவருவதாக நரேந்திர மோடிமேலும் தெரிவித்தார்.

Leave a Reply