சோனியா காந்தி போட்டியிடவுள்ள ரேபரலிதொகுதியில் அவரை எதிர்த்து உமா பாரதியை களமிறக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரலி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரை எதிர்த்துபோட்டியிட சரியான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்றும், இதற்கு உமா பாரதியே தகுதியானவர் என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கருத்துத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ஜான்சி தொகுதிக்கு உமா பாரதியை பாஜக அறிவித்துள்ள நிலையில், இப்போது பாஜக உமாபரதியை, சோனியா காந்திக்கு எதிராக களமிறக்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் வலுவான வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் ஆலோசித்துவரும் நிலையில், பா.ஜ.க.,வும் சோனியாவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை களமிறக்க ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply