அனைத்து தரப்பினரும் முன்னேறுவதன் மூலமே நாடுமுன்னேற முடியும் என்றும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ம.பி., மாநிலம் மாண்ட்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், அனைத்து மாநிலங்களும் ஒன்று போல் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கலாச்சாரத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கும்.

மக்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களுடன் கைகுலுக்குவதும், அதிகாரம் கிடைத்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துவதுமே காங்கிரஸ் கட்சியின்வழக்கம். அவர்கள் விலைவாசி உயர்வு குறித்தும் மத்திய அரசின் ஊழல்கள் குறித்தும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.

ஆதிவாசிகளின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரபாதுகாப்பு ஆகியவை பாஜக அரசின் முன்னுரிமைப் பணிகளாக இருக்கும் , அனைத்து தரப்பினரும் முன்னேறுவதன் மூலமே நாடுமுன்னேற முடியும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply