கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் நகரதேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாஜக. மாநில தலைவரும், கன்னியா குமரி தொகுதி பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

காங்கிரசுக்கு இப்போது சோதனைகாலம் . கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து காங்கிரஸ் முன்னணியில் உள்ளது என்று தெரிந்தவுடன், இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவிக்க அந்த நாட்டு அரசு முடிவுசெய்து விட்டது. மே 18ம் தேதி லட்சக் கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்தது. இதற்கு உதவிசெய்தது மத்திய காங்கிரஸ் அரசு. அந்த நிலை மீண்டும் வரக் கூடாது. மற்ற மாநிலங்களில் காங்கிரசின் முடிவு என்னவாக இருக்கும்? என்பது தெரியாது. அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும். ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் வெற்றிபெற்று விடக்கூடாது.

தமிழ் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும். அந்த எண்ணம் கொண்டவர் மோடி. பா.ஜ. மதவாத கட்சி அல்ல. என்று பேசினார்.

Leave a Reply