டெல்லி விமான நிலையத்திலிருந்து தனது ஹெலிகாப்டர் புறப்பட உரியநேரத்தில் அனுமதி தராமல் பலமணி நேரம் அதிகாரிகள் காத்திருக்க வைத்துவிட்டதாக பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி புகார் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக உ.பி., மாநிலம் பெரேலியில் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்தார். பிரசார மேடைக்கு மிகதாமதமாக வந்த மோடி கூறியதாவது:

நீங்கள் அனைவரும் எனக்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருகிறீர்கள். ஆனால் இந்ததாமதத்திற்கு நான்காரணம் அல்ல. டெல்லிவிமான நிலைய அதிகாரிகள் எனது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுத்து விட்டனர். நான் காலை 9.30 மணியில் இருந்து ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்தேன். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி கொடுக்கவில்லை. இந்த தாமதத்திற்கு நான் வருத்தம்தெரிவிக்கிறேன். ஆனால் நீங்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரம் காத்திருப்பது நிச்சயம் ஒரு போதும் வீணாகாது. என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply