2016 சட்ட மன்ற தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணிதொடரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் தேசியஜனநாயக கூட்டணியின் குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல்நகர செயல்வீரர்கள் கூட்டம் மண்டைக்காட்டில் நடந்தது.

கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி குறுகிய எண்ணத்துடன் உருவான கூட்டணி அல்ல. நீண்டகால திட்டத்திற்கான கட்டணி இது. 2016ல் வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி இணைந்து அமோக வெற்றிபெறும். இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரும் என்று அவர் பேசினார்.

Leave a Reply