பாஜக அணிக்கு தாவக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவர் கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்

தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவர் கொண்டா விஸ்வேஸ்வர்ரெட்டி, பா.ஜ.க அணிக்கு தாவக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் தற்போதைய நிலையில் காங்கிரஸுடனான கூட்டணி என்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்க்கான வாய்ப்பும் இல்லை என்கிறது கருத்துகணிப்புகள். எங்களைப் பொறுத்தவரை அன்று தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுத்தோம். இப்போது நல்ல நிர்வாகத்தை தெலுங்கானாவில் கொடுக்கவேண்டும் என்பது தான் இலக்கு.

அதனால் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதில் பயனில்லை. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பதற்கான நிலை இருக்கிறது.. அதை மறுப்பதற்கில்லை. என்று கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply