பாஜக தலைமையிலான தே.ஜ.,கூட்டணி வேட்பாளர்களுக்கு கூடுதல் போலீஸ்பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் மற்றும் டி.ஜி.பி ராமானுஜத்திடம் வெள்ளிக் கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: தர்மபுரியில் தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக. வேட்பாளர் அன்பு மணி ராமதாஸின் பிரச்சாரவேன் மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் வேனின்கண்ணாடி உடைந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அன்பு மணி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இதேபோல், ஆரணியில் கடந்தவாரம் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த பா.ம.க வேட்பாளர் ஏகே.மூர்த்தி மீதும் ஒருகும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்தசெயல்களில் ஈடுபட்ட வன்முறை கும்பலை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்தின் போது கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். நுண்ணறிவு பிரிவு காவல்துறையை பயன்படுத்தி, தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை சம்பவங்களை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply